கட்டார் வாழ் இலங்கையர்களுக்கிடையிலான 5 பேர் கொண்ட கால்பந்து போட்டி
கட்டார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் முதன் முதலாக அணிக்கு 5 பேர் கொண்ட FUTSAL PENALTY SHOOT OUT போட்டி தொடர், கத்தார் வாழ் புத்தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கட்டார்; அபு ஹமூர் கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் FUTSAL PENALTY SHOOT OUT போட்டி தொடர் மற்றும் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதன் போது ரஸ்லான் ஆகிப் ரவுஃப் ஆகியோர் போட்டிகளை தொகுத்து வழங்கினார், கட்டார் வாழ் புத்தளம் அமைப்பின் தலைவர் சஜித் ஜிப்ரி, போட்டியின் ஒழுங்கு விதிகள் ஒருங்கிணைப்பாளர் ஜஹாங்கீர் ரஃபீக் மற்றும் தஸ்தீக் நளீர், மொஹமட் அஸ்லீயுடன் இணைந்து மொஹமட் ஹம்தியாஸ{ம் போட்டி நடத்துனர்களாக செயற்பட்டனர்.
இந்நிகழ்வில் ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம். பாஸித், ஸ்கை தமிழ் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி மற்றும் CDF அமைப்பின் தலைவர் மற்றும் நிகழ்வு குழு தலைவர் புர்ஹான் மற்றும் PAQ செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட கல்பிட்டிய கால்பந்து அணியினருக்கும் ஹாஜி செவன் எஸ் அணியினருக்கும் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஹாஜி செவன் எஸ் அணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.
வெற்றிப்பெற்ற அணிக்கு கட்டார் வாழ் புத்தளம் அமைப்பின் தலைவர் சஜித் ஜிப்ரி வெற்றிக்கிணத்தை வழங்கி வைத்தார்.