கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ள ‘டொக்சிக்’ படுக்கையறை காட்சி!

நடிகர் யஷின் 40 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘டொக்சிக்’ (Toxic) படத்தின் கதாநாயகன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டது.

காணொளி வெளியானது முதல் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக, ஒரு மயானத்திற்கு அருகில் காரில் யஷ் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதுவே தற்போது சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளது.

இந்தக் காட்சி குறித்து சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன:

பெண்களை வெறும் மோகப் பொருளாக இயக்குனர் சித்தரிப்பதாக ஒரு தரப்பினர் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

இது பெண்களைக் கேவலப்படுத்துவது பற்றியது அல்ல, மாறாக ஒரு படத்தில் இத்தகைய காட்சி தேவையா என்ற கேள்வியை ஒரு தரப்பினர் எழுப்பியுள்ளனர்.

இயக்குனர் கீது மோகன்தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “பெண்களின் இன்பம், சம்மதம், பெண்கள் இந்த சமூகக் கட்டமைப்பைக் கையாள்வது போன்ற விடயங்களை மக்கள் புரிந்துகொள்ள முயற்சிப்பதைப் பார்த்து நான் நிதானமாக வேடிக்கை பார்க்கிறேன்,” என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கீது மோகன்தாஸின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.