கடலுக்கு சென்று காணாமல் போனவரை தேடி தருமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த 04 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 04 ஆம் திகதி கடலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், அவரை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நாகர்கோவில் பகுதியில் மடக்கி பிடித்த ஊரவர்கள் கடத்தல் தொடர்பில் ஒப்புக்கொண்ட நிலையில், அவரை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், தெரிவித்துள்ள தாயார் மேலும் அவருடன் சென்ற ஒருவர் கஞ்சா கடத்தல் தொடர்பில் கைதாகி இருப்பதுவும் தெரிவித்துள்ளார்.

தனது மகன் வீடு திரும்பாத நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பொலிஸார் அவரை தேடி வருவதாகவும், அவரை மீட்டுத் தருமாறும், கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்