கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர்.

கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் நீரோட்டத்தில் சிக்கி மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் டியூஷன் வகுப்புக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்து விட்டு கடலில் குளிக்க சென்றுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.