
கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
2026 ஆம் ஆண்டின் முதலாவது நாளான இன்று வியாழக்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அரச கடமைகளை வைபவ ரீதியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சர்வமதத் தலைவர்களின் மத அனுஷ்டானங்களும் இதன் போது இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து சகல உத்தியோகத்தர்களும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நாட்டுக்காக தியாகம் செய்து உயிர் நீத்த முப்படை வீரர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர மற்றும் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

