
கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
ஹம்பேகமுவ – குக்குல்கடுவ பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன், நேற்று வியாழக்கிழமை மாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 121 கிலோ 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளர்.
சந்தேகநபர் ஹம்பேகமுவ பகுதியை சேர்ந்தவர் (வயது 47) என தெரியவந்துள்ளது.
ஹம்பேகமுவ பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
