கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு

வருடாந்த கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

வருடாந்த கச்சத்தீவு திருவிழா நாளை வெள்ளிக்கிழமை நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து இந்த முறை மூவாயிரம் யாத்திரிகளும் இலங்கையிலிருந்து நான்காயிரம் யாத்திரிகளும் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.