கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரெஸ்பி தோட்ட கசிப்பு உற்பத்தியாளரான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சாமிமலை ஸ்டெரஸ்பி பிரதேசத்தில் பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை உட்பட அவரின் இரண்டு மகன்களையும் கடந்த 15 ஆம் திகதி கைது செய்தனர்.
மஸ்கெலியா பொலிசார் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது இந்த மூவரும் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
