ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்

 

ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப்பட்டியலில், இலங்கை அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன்படி இலங்கை அணி 103 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதுடன், 109 புள்ளிகளுடன் நியுசிலாந்து அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.