ஐரோப்பாவில் வெடித்து சிதறும் எரிமலை

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள எட்னா எரிமலை மீண்டும் வெடித்துள்ளதுடன் இதுவரை ஆபத்தான சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிசிலி தீவில் உள்ள கேடானியாவில் அமைந்துள்ள இந்த எரிமலை ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலை என்றும்இ இது தொடர்ந்து வெடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், குறிப்பிடத்தக்க சேதங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன, மேலும் ஆபத்தான சூழ்நிலை எதுவும் இதுவரை எழவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.