ஐ.பி.எல் தொடரில் ரியான் பராக் புதிய சாதனை
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ரியான் பராக் புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளார்.
இதன்படி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ரியான் பராக் தன்வசப்படுத்தியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியின் போது, மோயின் அலி வீசிய 13ஆவது ஓவரில் தான் எதிர்கொண்ட 5 பந்துகளில் சிக்சர்களை விளாசினார்.
இதனையடுத்து வருண் சக்கரவர்த்தி வீசிய 14 ஆவது ஓவரிலும் ரியான் பராக் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார்.
இதற்கமைய தான் எதிர்கொண்ட 6 பந்துகளிலும் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார் ரியான் பராக்.
அத்துடன் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய 5ஆவது வீரர் என்ற சாதனையையும் ரியான் பராக் படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல், ராகுல் தெவாட்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்