ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சான் விளைச்சலில் வீழ்ச்சி

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நாதன் குடியிருப்பு பிறமந்தனாறு உழவனூர் ஆகிய பகுதிகளில் ஜம்போ கச்சான் செய்கைக்கு சிறந்த இடம் என தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இவ்வருடம் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக ஜம்போ கச்சான் அறுவடையில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

இதன் காரணமாக சில விவசாயிகள் ஜம்போ கச்சான் அறுவடை செய்யாது கைவிட்ட நிலையில் காணப்படுவதாகவும்,  ஜம்போ கச்சான் தற்பொழுது நான்கு மாதம் கடந்த நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளது.

பல லட்சம் ரூபாய் செலவழித்து ஜம்போ கச்சான் செய்கையில ஈடுபட்ட விவசாயிகள் ஒரு கிலோ கச்சானை கூட இவ்வருடம் விற்பனை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக பயிர் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தமக்கு  நஷ்டயீட்டினை பெற்று தர வேண்டும்,  என பயிர்செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.