மக்களுக்கான பணியில் : ஏறாவூர் நாவலர் இளைஞர் கழகம் , சக்தி விளையாட்டுக்கழகத்தினர்

ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு நாவலர் இளைஞர் கழகம் மற்றும் சக்தி விளையாட்டுக்கழகம் இணைந்து இளைஞர் சேவை அதிகாரி பா.கிஸ்கந்தமுதலியின் வழிகாட்டுதலின் கீழ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 250 பேருக்கான சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் கூடுதல் பாதிப்பினை எதிர் கொண்ட ஈரளக்குளம் மற்றும் இலுக்கு பொத்தானை பெரிய வட்டவான் ஆகிய கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணியாக 250 பேருக்கான பகல் உணவு வழங்கி வைக்கப்பட்டது.

ஆறுமுகத்தான் குடியிருப்பு நாவலர் இளைஞர் கழகம் மற்றும் சக்தி விளையாட்டுக்கழகம் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்களுடன் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று குறித்த சேவைகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.