ஏறாவூரில் மீனவரின் சடலம் மீட்பு

ஏறாவூர் புன்னக்குடா கடற்பகுதியில் கரையொதிங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தளவாய் பகுதியைச் சோந்த தங்கராசா விஜயன்(வயது-45) என அடையாளம் காணப்பட்டுள்ளார் , இவர் இப்பகுதியில் மிகநீண்ட காலமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவருகின்றது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை , இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்