எல்ல விபத்து- பஸ்ஸீனை ஆய்வு செய்யும் பணி நாளை
எல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துக்குத் தொழில்நுட்ப பிரச்சினை காரணமா என்பதை கண்டறிய, அரசுப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் விசாரணை நிபுணர் நாளை எல்லவுக்குச் சென்று பஸீன் பாகங்களை ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் பஸ் மணிக்கு 70 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட பஸீன் சிதைவுகள் தற்போது எல்ல பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மோட்டார் வாகன ஆய்வாளரும் நாளை எல்லவுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.