எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இன்று வெள்ளிக்கிழமை  முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரித்து அதன் புதிய விலை 361 ரூபாவாகவும்,

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 417 ரூபாகவும்,

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 341 ரூபாவாகவும்,

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 359 ரூபாவாகவும் ,

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்