எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் லிமிட்டட் (CPSTL) ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அமைச்சர் தனது புகாரில், CPC மற்றும் CPSTL இன் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை தொடங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் கொள்வனவு, முன்மொழிவுகளை மதிப்பீடு செய்தல், ஆர்டர்கள் வழங்கப்படாமை, விநியோகிஸ்தர்களை தெரிவு செய்தல், கொடுப்பனவுகளில் தாமதம், விநியோக முறைகேடுகள், தனிநபர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆகியவை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.