ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் காலமானார்
கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக இன்று (03) உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு அக்கராயன்குளம் அணைக்கட்டு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற உள்ளது.
இவர் 2010ம் ஆண்டு முதல் தினக்குரல், வலம்புரி, தினகரன், தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களில் கிளிநொச்சி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
நீண்ட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் 52வது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.