உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ஆம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

காயங்கேணி, காகிதநகர், தியாவட்டவான், மற்றும் மயிலங்கரச்சை போன்ற கிராமங்களை சேர்ந்த 100 பொதுமக்களுக்கு பெறுமதி வாய்ந்த இடர்கால உலருணவுப் பொதிகளாக நேற்று சனிக்கிழமை இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.

இவ்வுலருணவுப்பொதிகளை பெறுவதற்கான பயனாளிகள் இன,மத வேறுபாடின்றி கிராம சேவகர் ஊடாக தெரிவு செய்யப்பட்டு இருந்ததுடன் விஷேடமாக மாற்றுத்திறனாளிகளும் , நோய்வாய் பட்டிருந்த நோயாளிகளுமே முன்னுரிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர, 23 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.பி. குலதிலக மற்றும் கொழும்பு ரொட்டரி கழகத்தலைவர் செரூவன் பெர்னாண்டோ புள்ளே, ராஜன் அமரசிங்க , லலித் விஜயவர்த்தன , விதுர, கே.குசால் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டு இவ்வுலருணவுப் பொதிகளை வழங்கி வைக்கப்பட்டிருந்தது இராணுவத்தினரால் இவ்வாறான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மக்களுக்கு மேற்கொண்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.