உலக வங்கியின் புதிய தலைவர் நியமனம்
உலக வங்கி குழுமத்தின் தலைவராக அஜய் பால்சிங் பங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், பதவி காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது. இருப்பினும் முன்கூட்டியே பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச நிதி நிறுவனமான ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ., இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்