உலக சாதனை படைத்த மந்தனா!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 1000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா பதிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

நடப்பாண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மிருதி மந்தனா 4 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளார் .