உலக கிண்ணக் கிரிக்கெட் : இறுதிப் போட்டிக்கு தகுதி பெற போகும் அணி?

2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் இந்த போட்டி மும்பை வன்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நான்கு போட்டிகள் வன்கடே மைதானத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பாடி, வெற்றி பெற்ற ஒரே அணி அவுஸ்திரேலியாவாகும்.

இதன்படி, இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெறும் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்து அதிக ஓட்டங்களை பெற்றால் அது வெற்றிக்கு வாய்ப்பளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.