உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபவனி!
-யாழ் நிருபர்-
உலக இயன் மருத்துவத் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்.மானிப்பாயில் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மானிப்பாய் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடைபவனியில் கிறீன் வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.



