உரத்தின் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் உரத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் அதிகாரி சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார்.
ஒரு மெட்ரிக் டொன் யூரியா சுமார் 425 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது 450 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உரப் பற்றாக்குறை இல்லை என்றும், சிறுபோகத்திற்கான யூரியா உரத்தின் தேவை சுமார் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் மெட்ரிக் டொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், கடந்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 15,000 மெட்ரிக் டொன்கள் சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.