உயர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இலங்கை

ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னால் மூளையாக செயற்பட்டவர்களை இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் நன்கு அறிந்திருந்தாலும், சட்ட நடவடிக்கை, எடுக்க முடியாத நிலையில் இலங்கை இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .

நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி  இதனைக் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு, மூளையாக செயற்பட்டவர்களை அடையாளம் காண அதிகாரிகள் இன்னும் போராடி வந்தாலும், உண்மையைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இந்த தாக்குதல்கள் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது தொடர்பில்  தாம் ஏற்கனவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் இருப்பினும்  எதனையும் வெளியே கூறமுடியாது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் தமது அரசாங்கத்தை கவிழ்க்கவும் இந்த குற்றம் புரியப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.