உடனடி போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இரண்டு நாள் மோதலை தொடர்ந்து , கம்போடியா உடனடி போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த மோதல்களில், 16இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், ஒரு இலட்சத்துக்கு 30ஆயிரத்து மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கின்றது.
நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், சண்டைக்கு அமைதியான தீர்வு தேவை என்றும் கம்போடியாவின் ஐ.நா. தூதர்தெரிவித்துள்ளார் .
போர்நிறுத்தம் தொடர்பில் தாய்லாந்து இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.எல்லை மோதல் “போராக அதிகரிக்கக்கூடும்” என தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் நேற்று எச்சரித்துள்ளார் .