ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் குண்டு வெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் இது அதாடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் இதற்கு பொறுப்பான பலநபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தெய்யந்தரவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்தார், மேலும் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மையையும் வெளிக்கொணர தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.