ஈரானில் இருந்து தமது பிரஜைகளை வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தல்!

ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது.

தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் “கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி” அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

ஈரானுக்கான அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.