
இஸ்மாயில் முத்து முஹம்மதுவின் பதவி வெற்றிடத்துக்கு தாஹிர் நியமனம்!
நாடாளுமன்றில் ஏற்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசன வெற்றிடத்துக்கு அந்த கட்சியின் மரிக்கார் மொஹமட் தாஹிரின் பெயரை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் இஸ்மாயில் முத்து மொஹமட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மரிக்கார் மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
