இளைஞனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கிய கும்பல்

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எம்பிலிப்பிட்டிய, கிருலவெல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத இளைஞனே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் மர்ம குழுவினால் கடத்தப்பட்டு காட்டு பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் குட்டிகல மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் இணைந்து குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையினால் இளைஞனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸார் அந்த இடத்தை சுற்றிவளைத்த போது, ​​குற்றவாளிகள் வேனில் தப்பிச் சென்றதாகவும், சந்தேகநபர்களில் ஒருவர் பெரும் முயற்சியில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.