இளம் யுவதியை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்

அவிசாவளை – கொழும்பு வீதியில் அமைந்துள்ள பழச் சந்தையில் மாம்பழங்களை கொள்வனவு செய்ய வந்த பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் பெண் வர்த்தகரை தாக்கியுள்ளார்.

மொனராகலை தொம்பகஹவெல பகுதியை சேர்ந்த 21 வயதுடையவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக பெண் ஹன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பழச்சந்தையில் மாம்பழங்களை கொள்வனவு செய்ய வந்த போது மாம்பழங்களின் விலை தொடர்பான பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தர்க்கத்தை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.