இளம் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்- ஹிஜ்ரா சமூகத்தால் கெளரவிப்பு!
-அம்பாறை நிருபர்-
சம்மாந்துறையைச் சேர்த்த இளம் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் சாரணியர் ஜே. பாத்திமா மின்ஹா (மின்மினி) International World Record Of Asia அமைப்பினால் Young Achiever Award – 2025 வழங்கி கெளரவிக்கப்பட்டமையை முன்னிட்டு கமு/ சது/ ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தில் பாராட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபரும், தரு சாரணர் சின்ன விருது பெற்ற தலைவருமான வை.பீ. எம். இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது. மின்மினி மின்ஹாவுக்கு மலர் கொத்து ஆசிரியரும் மௌலவியுமான எம்.ஏ. அப்துல் ரஹீம் வழங்க, ஆசிரியை பீ. எல். றுக்கியா மலர்மாலை அணிவித்து வரவேற்க, ஆசிரியை எம்.ஏ. ரமீஸா அவர்களினால் பொன்னாடை பேர்த்தப்பட்டு, ஆசிரியர் எம்.பீ. எம். ரிஷாட் அவர்களினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டு, அதிபரினால் மின்மினிக்கு “Active Girl Scout Award-2025” எனும் விருதும், பரிசும் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.
மின்மினி தொடர்பிலான பாராட்டுரையினை பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர் சட்டத்தரணி ரிசாத் எம் புஹாரி நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், சாரணர் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவி மின்மினி மின்ஹா அவர்களினால் பாடசாலையின் பௌதீக வள பொறுப்பாசிரியர் யூ.எல்.எம். நெளபான் அவர்களிடம் பழக்கன்றுகள் வழங்கப்பட்டு, பாடசாலை வளாகத்தில் நடப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

