இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பிரித்தானியா பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தல்

செம்மணியில் நடந்த குற்றங்களை அங்கீகரித்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு  பரிந்துரைக்கும் பாராளுமன்றத் தீர்மானத்தை பிரித்தானியா நிறைவேற்ற வேண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் அமைப்பு ஒன்று, அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் மனுவைவொன்றை சமர்ப்பித்து இதனை வலியுறுத்தியுள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உட்பட இலங்கை மூத்த இராணுவ அதிகாரிகள் மீது பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளை அந்த அமைப்பு வரவேற்றதுடன் இந்த தடைகள் போதாது என குறிப்பிட்டுள்ளது.

ஹோலோகாஸ்ட், ருவாண்டா, பொஸ்னியா மற்றும் உய்குர் இனப்படுகொலையை பிரித்தானியா அங்கீகரித்ததை மேற்கோள் காட்டி, குறித்த அமைப்பினர் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை ஒப்புக்கொள்ளத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் இனப்படுகொலை “தார்மீக ரீதியாக முரணானது” என்றும், செம்மணி படுகொலை போன்ற அட்டூழியங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது