இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன?
இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன?
கச்சதீவு ஒப்பந்தம்
- கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டரும் நீளம்6 கி.மீ ஆகும்.
- இராமநாதபுரம் அரசருக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது.
- எனினும், மீன் பிடி உரிமையும், பயணிகள் விசா இன்றி கச்சத்தீவு சென்று வரும் உரிமையும் பாதுகாக்கப்பட்டு, மீன் வலைகளை உலர்த்தவும் அனுமதி இருந்தது.
- அதன் பின் 1976ம் ஆண்டு, ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி மறுக்கப்பட்டது.
- யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள சப்த தீவுகள் எனப்படுகின்ற பிரதான ஏழு தீவுகளுடன் பாலைதீவு, இரணை தீவு, கக்கிர தீவு என்பவற்றுடன் கச்சதீவையும் சேர்த்து பதினொரு தீவுகள் அமைந்துள்ளன.
- இவற்றுள் இரணைதீவு தவிர்ந்த கச்சதீவு, பாலைதீவு, கக்கிரதீவு ஆகிய மூன்றும் மக்கள் வாழிடமற்ற வெறும் தீவுகளாகவே காணப்படுகின்றன.
கச்சதீவு கடற்பகுதியின் பொருளாதார முக்கியத்துவம்
- ஆழம் குறைவான (6மீ – 18மீ) அகன்ற கண்டத்திட்டுக்களையும் சேறும், மணலும், கலந்த அடித்தளம், இடையிடையே முருகைக் கற்கள் என்பனவற்றைக் கொண்டு விளங்குகின்றது.
- இந் நீர்ப்பரப்பு இலங்கை -இந்திய நிலத்திணிவுகளுக்கு இடையில் அமைந்துள்ளமையால் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளினால் பெரிதும் பாதிப்படைவதில்லை.
- மன்னார் தீவு, பாம்பன் தீவு, மற்றும் யாழ்ப்பாணத் தீவுப்பகுதிகள் வருடம் முழுவதும் மீன்பிடித் தொழிலைச் செய்வதற்கான வாய்ப்பினைக் கொண்டிருக்கின்றன.
- இரு நாடுகளின் கரையோரப் பிரதேசங்களிலிருந்தும் கணிசமான மக்கள் இந்த பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சதீவும் இலங்கை – இந்திய மீனவரும்
- எல்லைத்தாண்டிய மீன்பிடி காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இக்கடற்பரப்பில் சந்தித்து வரும் உயிரிழப்புக்கள் மற்றும் உடமைகள் இழப்புக்களால் கச்சதீவை இந்தியா திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
- கச்சத்தீவு அமைந்திருக்கும் இடம் இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையில் மிக குறுகியது என்பதால், மீனவர்கள் அடிக்கடி இலங்கையின் பொருளாதார மண்டலத்துக்குள் நுழையும் நிலை ஏற்படுகிறது.
- இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடிவலை மீன்பிடியை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவது இருநாட்டு மீனவர்களிடையே முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது.
- 1974 ஆம் ஆண்டு கச்சதீவு தொடர்பான இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்படும்வரை தமிழக மற்றும் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த யாத்திரிகர்கள் கச்சதீவுக்குச் சுதந்திரமாகச் சென்றுவரலாயினர்.
- 1974 இன் பின்னர் கச்சதீவு சட்டபூர்வமாக இலங்கையின் நிர்வாகத்தின் கீழ் வந்த பின்னர் அரசின் அனுமதி பெற்றே அங்கு செல்ல வேண்டிய நிலை இருநாட்டு மக்களுக்கும் ஏற்பட்டது.
கச்சதீவு மீட்பு
- தமிழ்நாட்டு மீனவர் மீதான தாக்குதல் காரணமாக கச்சதீவை மீட்குமாறு தமிழ்நாடு அரசு தொடர்ந்து இந்திய மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றது.
- இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தை இரத்து செய்யதால் மட்டுமே கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமாகும்.
- மீனவர் பிரச்சினை தொடர்பில் இருநாட்டு அரசாங்கமும் தீர்வு காணாவிட்டால் கச்சதீவு பிரச்சினை நீண்ட காலத்துக்கு தொடரும்.