
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
விலை குறைந்து சென்ற நிலையில் சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
அதன்படி, கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 20 ஆயிரம் ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வியாழக்கிழமை தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 336,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 308,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
