இலங்கைக்கு சென்ற மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை
இலங்கைக்கு வந்த தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் ஒகஸ்ட் 22 ஆம் திகதி ஜப்பானுக்கு திரும்ப வேண்டியவர்கள். எனினும் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு அனுப்பியுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.