இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் மீட்பு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை தமிழக கரையோர பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தியா இராமேஸ்வரத்தில் வீட்டொன்றிலிருந்து நேற்று சனிக்கிழமை 550 கடல் அட்டைகள் மீட்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீட்டின் உரிமையாளர் தப்பிச்சென்றுள்ளதுடன் குறித்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல் அட்டைகள் கடத்தல்காரர்களால் பிடிக்கப்பட்ட பின்னர் உலர்த்தப்பட்டு இலங்கையின் ஊடாக தூர கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்