இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு
கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் கொதாரி கட்சுகியுடன் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் இருதரப்பு பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதுள்ள நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்