இலங்கை குற்றவியல் நீதிமன்றங்களில் 33 சதவீதமானவை சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!
இலங்கையில் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளாகவே உள்ளதாக இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடளுமன்ற கூட்டத்தொடரில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொரிவித்துள்ளார்.
குற்றவியல் நீதிமன்றங்களில் 29,723 வழக்குகள் உள்ளன, அவற்றில் 5,550 சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் 4,312 பாலியல் வன்புணர்வு வழக்குகள் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இலங்கையர்களாகிய நாம் வெட்கப்படவும், வருந்தவும் வேண்டும். இந்த புள்ளிவிவரங்கள் இலங்கை மக்களின் கலாசாரத்தை மற்ற நாடுகளுக்கு அம்பலப்படுத்துகின்றன. இந்த தவறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கடந்த பத்து மாதங்களில் நாடாளுமன்றத்தால் 25 சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இலங்கையின் நீதித்துறை அமைப்பில் சுமார் 1,127,265 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முதல் குற்றவியல் நீதிமன்றங்கள் வரை 399 நீதிபதிகள் மட்டுமே இருப்பதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்