
இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீங்கியது
இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் இன்று ஞாயிற்று கிழமை நீக்கப்பட்டது என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் பல காலமாக நடைமுறையில் இருந்த நிலையில் இத்தடை வெகு விரைவில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னர் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இத்தடையானது நீக்கப்பட்டதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
