
இலங்கை அணிக்கு 147 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அணிக்கு 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
