இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீ

மீரிகம – தங்கோவிட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது.

குறித்த இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் இரவு நேரத்தில் கடமையில் இருந்த தொழிலாளர்களை பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததுடன் தீ பரவலால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த தீ பரவல் கம்பஹா தீயணைப்பு படையினரின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும்  தீ பரவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தங்கோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்