இரு வங்கிகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி

இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கி மற்றும் அரச அடகு மற்றும் முதலீட்டு வங்கிகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வைப்புகளை சேமிப்பதில் மட்டுப்படுத்தப்பட்ட கொள்ளளவு, பலவீனமான இலாபத்தன்மை, குறைந்தபட்ட மூலதன தேவையை பூர்த்தி செய்ய இயலாமை போன்ற காரணங்களினால் குறித்த வங்கிகளின் தற்போதை வியாபார மாதிரிகள் நிரந்தரமற்ற நிலையில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய மறுசீரமைப்பு தொடர்பில் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.