இரத்தினபுரியில் இரண்டு கடைகளில் திடீரென பரவிய தீ!

இரத்தினபுரி – பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில், இன்று வெள்ளிக்கிழமை காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு பிரிவு மற்றும் இராணுவத்தினர் இணைந்து, தீயை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.