இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் தனியார் ஆய்வகத்திற்கு ரூ 5 இலட்சம் அபராதம்
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் தனியார் ஆய்வகத்திற்கு ரூ 5 இலட்சம் அபராதம்
மல்வானாவில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்று, முழு இரத்த எண்ணிக்கை (FBC ) பரிசோதனைக்கு அரசு அனுமதித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்ததற்காக மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணைய விதிமுறைகளை மீறி, ஒரு நோயாளியிடம் அதிக கட்டணம் வசூலித்ததை ஆய்வகம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இரத்த பரிசோதனைக்கு அரசு அறிவித்த உச்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும்.
மருத்துவத் துறையில் கட்டண மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான அமலாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த வழக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.