இரண்டு குழந்தைகளையும் சுத்தியலால் அடித்து கொலை செய்த தந்தை!

தனது இரண்டு குழந்தைகளையும் தந்தையே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியில் ஸ்ரீகாந்த் – லட்சுமி தம்பதி வசித்து வந்தனர்.

இவர்களுக்கு ஆதித்யா என்ற 4 வயது மகனும், அமுல்யா என்ற மகளும் உள்ளனர். மலகாலா கிராமத்தில் தங்கியிருந்த இவர்கள் இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வீட்டில் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்- லட்சுமி தம்பதி இடையே இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஸ்ரீகாந்த் கடும் கோபமடைந்தார்.

அப்போது அதிகாலையில் மனைவியை தாக்கிய அவர்,  திடீரென சுத்தியலால் 2 குழந்தைகளையும் பயங்கரமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த் தலைமறைவாகி விட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி மீட்கப்பட்டு மைசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீரங்கப்பட்டணா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளையும் தந்தையே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்