இரண்டு கஞ்சா செடிகளுடன் தொழிலாளி கைது
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா புரவுன்சீக் தேயிலைத் தோட்டத்தின் எமிலினினா பிரிவில் உள்ள ஒரு காய்கறித் தோட்டத்தில் சட்டவிரோதமாக இரண்டு கஞ்சா செடிகளை பயிரிட்டதாக சந்தேகத்தின் பேரில் மஸ்கெலியா காவல்துறை அதிகாரிகள் குழு இன்று சனிக்கிழமை தோட்டத் தொழிலாளியைக் கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா காவல் நிலையத் பொறுப்பதிகாரி ஸ.எஸ.புஷ்பகுமாரவுக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தபட்ட நிலையில் சந்தேக நபரை ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யபட்டு , எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி பணித்துள்ளார்.
