இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் சில நாட்களிலேயே உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது. குழந்தைகளும் தாயும் நல்ல உடல் நலத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தாய் திடீரென உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்