இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடமத்திய மாகாணத்திலும், திருகோணமலை, புத்தளம் , மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்