இன்று முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதற்கமைய, பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான வாகனங்கள், தனியார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் மிதிவண்டி என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்கள், அரச நிறுவன விதிகளுக்கு உட்பட்டு அவசியமான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை 90 நாட்களுக்குள் பதிவு செய்யத் தவறினால் 3 சதவீத தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான வாகனத்தைப் பதிவு செய்வதற்கான செலவு, காப்பீடு மற்றும் கப்பல் கட்டணம் என்பவற்றில் 45 சதவீதத்தையும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர தற்போது அமுலில் உள்ள 20 சதவீத தீர்வை வரியுடன் அதற்கான 20 சதவீத நிறையிடப்பட்ட வரி அடங்கலான முழு தீர்வை வரியை இறக்குமதியாளர்களுக்கு 30 சதவீதமாகத் திருத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24